தெலுங்கில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகும் காஜல் அகர்வால்
அஜித்,விஜய் உள்பட பெரிய நடிகர்களுடன் நடித்த போதிலும் தமிழில் போதிய வாய்ப்பு கிடைக்காத காஜல் அகர்வால், தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.
காஜல் அகர்வாலின் சினிமா வாழ்க்கை 10 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அவர் தற்போது பாரிஸ் பாரிஸ் படம் மூலம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்த நிலையில் காஜல் அடுத்தடுத்து 2 தெலுங்கு படங்களில் நடிக்க இருக்கிறார். ராணா நடித்த நேனே ராஜு நேனே மந்திரி படத்தை இயக்கிய தேஜா இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக காஜல் நடிக்க உள்ளார்.
இது தவிர சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக காஜல் அகர்வால் நடிக்கிறார்.