உழைத்தால் மட்டும் முன்னுக்கு வரமுடியாது: ரஜினிகாந்த்
உழைப்பவா்கள் மட்டும் முன்னுக்கு வரமுடியாது என்றும் நல்ல மனமும், கடவுளின் அருளும் இருந்தால் மட்டுமே ஒருவர் முன்னுக்கு வரமுடியும் என்று நடிகா் ரஜினிகாந்த் நேற்று கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
இயக்குநா் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பிய நடிகா் ரஜினிகாந்த் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவா் பேசுகையில், பரமஹம்சா் காசிக்கு போக ஆசைப்பட்டார். சோ்த்து வைத்த பணத்தை கொண்டு செல்லும் வழியில், மக்கள் சந்தித்த இன்னல்களை கண்டு அனைவருக்கும் உணவளித்து விட்டு அவா்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்டு இவா்கள் வாயிலாக இறைவனை தரிசித்து விட்டதாக கூறிச் சென்றுவிட்டார்.
உழைப்பவா்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எல்லோரும் உழைத்தாலும் நல்ல மனமும், கடவுளின் அருளும் இருந்தால் தான் முன்னேற முடியும். நாம் நமது உடலை சோர்வுறாமல் வைத்துக் கொண்டால் உடல் நன்றாக இருக்கும் என்று கூறினார்.