பயிற்சியின்போது கோவை கல்லூரி மாணவி மரணம். பயிற்சியாளர் கைது

பயிற்சியின்போது கோவை கல்லூரி மாணவி மரணம். பயிற்சியாளர் கைது

தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் கோவை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கபப்ட்டது. 3 மாடிகளை கொண்ட இந்த கல்லூரியில் 2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றுவது போலவும் பயிற்சி நடைபெற்றபோது பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்துவந்த லோகேஸ்வரி என்ற 19 வயது மாணவி எதிர்பாராமல் முதல் மாடியில் இருந்த சிலாப்பில் இடித்ததால் படுகாயம் அடைந்தார்..

இந்த விபத்தில் லோகேஸ்வரியின் தலை மற்றும் கழுத்து பகுதியில் பலமாக அடிபட்டது. இதனை பார்த்துக்கொண்டு இருந்த மாணவிகள் பயத்தில் அலறினர். உடனடியாக காயமடைந்த மாணவி லோகேஸ்வரி உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முதலுதவி பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply