86 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி: ரூட் அபார சதம்
இங்கிலாந்து நாட்டு அணிக்க்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் இரு அணிகளும் 1-1 என்ற நிலையில் உள்ளது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 322 ரன்கள் குவித்தது. ரூட் அபாரமாக விளையாடி சதமடித்தார். இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஸ்கோர் விபரம்:
இங்கிலாந்து: 322/7 50 ஓவர்கள்
ஜோ ரூட்: 113
மோர்கன்: 53
வில்லே: 50
இந்தியா: 236/50 50 ஓவர்கள்
விராத் கோஹ்லி: 45
தோனி: 37
தவான்: 36
ஆட்டநாயகன்: ஜோ ரூட்
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி ஜூலை 17ஆம் தேதி நடைபெறும்