மோடியை கட்டிப்பிடித்து கண்ணடித்த ராகுல்காந்தி: இணையத்தில் வைரல்
மக்களவையில் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தனது உரையை முடித்த பின்னர் மோடியை அவரது இருக்கையில் சென்று கட்டியணைத்தார்.
மக்களவையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முந்தைய விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த விவாதத்தில் சற்றுமுன் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் சார்பில் உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி சரமாரி விமர்சனம் செய்தார். அவரது பேச்சு அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தனது உரையை முடித்தவுடன் அவர் நேராக பிரதமர் மோடி அருகில் சென்று மோடியை கட்டிப்பிடித்து சிரித்தார். நேரடியாக சென்று மோடியின் இருக்கையில் அவரை கட்டிப்பிடித்தார் ராகுல். மோடி இதனை கொஞ்சமும் எதிர்பாராத பிரதமர் மோடி இன்ப அதிர்ச்சி அடைந்து அவருக்கு கைகொடுத்தார். அதன் பின்னர் ராகுல்காந்தி தனது இருக்கையில் உட்கார்ந்ததும் மோடியை பார்த்து கண்ணடித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.