எந்தெந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு: ஒரு பார்வை
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதன் பின்னர், தொடர்ச்சியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு, ஒருசில பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து முடிவு செய்யபட்டு வரும் நிலையில் கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டி கவுன்சில் 328 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளது.
இந்த நிலையில், புதுடெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 28வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜிஎஸ்டியில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு பொருட்களின் வரி விதிப்பு விகிதமும் குறைக்கப்பட்டது. குறிப்பாக நடுத்தர வர்க்க மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வாஷிங் மிஷன், குளிர்சாதனப் பெட்டிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 18 பொருட்களின் ஜிஎஸ்டி வரி 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.
குறைக்கப்பட்ட பொருட்கள்:
குளிர்சாதன பெட்டி
வாஷிங் மிஷின்
வக்கியூம் கிளினர்
பெயிண்ட்
வாட்டர் கீட்டர்
கிரைண்டர்
மிக்ஸர்
தொலைக்காட்சிப் பெட்டி (27 இன்ச் வரை மேற்கண்ட பொருட்களுக்கு தற்போது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 10 சதவீதம் குறைக்கப்பட்டு 18 சதவீதமாக உள்ளது.& ஹேண்ட் பேக்
ஜுவல்லரி பாக்ஸ்
அலங்கார கண்ணாடிகள்
கை விளக்குகள்.., உள்ளிட்ட பொருட்கள் 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது