பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு ஆபத்து: இம்ரான்கான்
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் ஜுலை 25ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு தற்போது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசியபோது, ‘பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், அது நாட்டின் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவருகிறார். எதிர்வரும் பொதுத் தேர்தலில், அவரது கட்சி பெரும்பான்மை பெற்று அவர் பிரதமராவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிபிசி ஊடகத்திற்கு பேட்டியளித்த இம்ரான்கான், ‘பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் ஏதாவது ஒரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆபத்து ஏற்படும் வகையில் அமையும் என்று கூறியுள்ளார்.
இம்ரான்கான், பாகிஸ்தான், தேர்தல், பொருளாதாரம்