ஊழல் புகார் கூறியதால் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்ட எம்பி
தன் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியதால் அவமானம் தாங்காமல் எம்பி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்தியாவில் நடக்க வாய்ப்பு இல்லை என்று தெரியும், இந்த சம்பவம் நடந்தது தென்கொரியாவில்….
தென் கொரியா நாட்டில் ஜஸ்டிஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்தரோக் ஹோ சான் என்பவர் மீது ஊழல் குற்றச்சாட்டை எதிர்க்கட்சி தலைவர்கள் கூறினர. அவர் ரூ. 30 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர்
கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரான ஹோ சான், தன்மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை எண்ணி அதிர்ச்சிஅடைந்தார். கடந்த இரண்டு நாட்களாக் அவர் மிகுந்த வருத்தத்தில் இருந்த நிலையில் ரோக் ஹோ சான் குடியிருந்த அடுக்கு மாடி வீட்டில் பிணமாக கிடந்தார். அவர் 3 கடிதங்களை எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் என்ன உள்ளது என்பது குறித்து போலீசார் வெளியிடவில்லை. இருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டதை மட்டும் தென்கொரிய போலீசார் உறுதி செய்தனர்