இந்த இரண்டு வசதிகளும் இனி கூகுளில் கிடையாது?
கூகுள் நிறுவனம் தனது எக்ஸ்டென்ஷன் மூலம் பயனாளிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதில் இரண்டின் சேவையை முடித்து கொள்ள முடிவு செய்துள்ளது.
ஒன்று யூஆர்.எல் ஷார்ட்னர். ஒரு இணையதள முகவரியின் நீளம் அதிகமாக இருந்தால் இந்த ஷார்ட்னரின் மூலம் அதை சின்னதாக்கி கொள்ளலாம். இந்த வசதியை பலர் பயன்படுத்தி வந்தனர்.
அதேபோல் கூகுள் பயனாளிகள் அதிகம் பயன்படுத்தும் ஒரு எக்ஸ்டென்ஷன் ‘சேவ் டு கூகுள்’. இந்த இரண்டு வசதிகளையும் வரும் ஆகஸ்ட் 15 முதல் நிறுத்தப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது