வெளிநாட்டு சுற்றுப்பயணத்திலும் கருணாநிதியின் உடல்நலத்தை விசாரித்த பிரதமர் மோடி
காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலை குறித்து, பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்து நலம் விசாரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களாகவே, உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நலம் குறித்து இதுதொடர்பாக தனியார் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வயது மூப்பு காரணமாக உடல் நலிவுற்று காணப்படுகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் உடனிருக்கின்றனர்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கருணாநிதி நலம் விசாரித்துள்ளார். அங்கிருந்து தொலைபேசி வாயிலாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடம் உடல்நலம் குறித்து கேட்டுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் விசாரித்தேன். அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம். விரைவில் பூரணமாக குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.