முன்னாள் பிரதமர் செய்த திடீர் யாகம்! ஏன் தெரியுமா?
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று இரவு ஏற்படும் நிலையில் இதனால் ஏற்படும் தீய விளைவுகளை போக்க முன்னாள் பிரதமர் தேவகெளடா சிறப்பு யாகம் செய்து பூஜை செய்துள்ளார்.
சூரியன், புவி, சந்திரன் மூன்றும் நேர்க்கோட்டில் வரும் போது, சூரிய ஒளி சந்திரனுக்கு செல்லாமல் புவி மறைத்துக் கொள்கிறது. அப்போது ஏற்படுவது தான் சந்திர கிரகணம் ஆகும். இந்நிலையில் இன்று இரவு 11.54 மணிக்கு பகுதி சந்திர கிரகணம் தொடங்குகிறது.
இரவு 1 மணியளவில் முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பின்னர் 103 நிமிடங்கள் நீடித்து, அதிகாலை 2.43 மணிக்கு சந்திர கிரகணம் முடிகிறது. கிரகணத்தின் போது ரத்த சிவப்பு நிறத்தில் நிலா காட்சியளிக்கும். இது 21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திர கிரகணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு 11.54க்கு தொடங்கி, நாளை அதிகாலை 3.49 வரை சந்திர கிரகணம் நீடிக்கிறது. கிரகணம் தொடங்குவதற்கு முன்பாக, வீட்டில் உள்ள தண்ணீர்க் குடம், உணவுப் பாத்திரங்களில் தர்ப்பையை வைத்துவிட வேண்டும். அவ்வாறு செய்தால் எந்தவித கதிர்வீச்சும் நெருங்காது. கிரகணம் முடிந்ததும் நீராட வேண்டும்.