கருணாநிதி உடல்நிலை: காவேரி மருத்துவமனையின் லேட்டஸ்ட் அறிக்கை
திமுக தலைவர் கருணாநிதி நேற்று அதிகாலை 1.30 மணிக்கு ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ரத்த அழுத்தம் நார்மலாக இருப்பதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக சற்றுமுன் காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளது
மருத்துவ நிபுணர்கள் குழுவினர் கருணாநிதியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்ள ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.