சீரான ரத்த அழுத்தம், எந்திர உதவியின்றி சுவாசிப்பு: கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம்
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை பின்னடைவு மற்றும் முன்னேற்றம் என மாறி மாறி இருந்து வருவதால் திமுக தொண்டர்கள் பெரும் கவலையில் இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் ரத்த அழுத்தம் மற்றும் நாடி துடிப்பு இயல்பாக உள்ளதாகவும், எந்தவித எந்திர உதவியும் இல்லாமல் அவர் இயல்பாக சுவாசித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கருணாநிதியின் முக்கிய உள்ளுறுப்புகள் சிகிச்சைக்கு பின்னர் சீராக செயல்படுவதை கண்டு மருத்துவர்களே வியப்படைந்துள்ளதாகவும், போராடும் குணமுள்ள கருணாநிதி எமனிடமும் போராடி வென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.