ஆன்லைன் முறையில் நீட் தேர்வு இல்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

ஆன்லைன் முறையில் நீட் தேர்வு இல்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு இனிவரும் ஆண்டுகளில் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என்று வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நீட் தேர்வு ஆன்லைனில் நடைபெறாது என்றும் ஆனால் கணினியில் நடைபெறும் என்றும் கேள்வித்தாள் மூலம் நீட் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ”ஆன்லைன்’ எனப்படும், இணைய வசதியில் தேர்வை எழுதும்போது, விடைகள், உடனுக்கு உடன், தேர்வை நடத்தும் அமைப்புக்கு சென்று விடும்.ஆனால், கணினி முறையில், தேர்வுக்கான கேள்வி தாள்கள் ஏற்கனவே, தரவிறக்கம்செய்யப்பட்டு, கணினியில் தயாராக இருக்கும். மாணவர்கள், ‘மவுஸ்’ உதவியுடன்,அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும்.

இதற்கு இணைய வசதி தேவையில்லை.அடுத்த ஆண்டு நடக்கஉள்ள, நீட் தேர்வுக கணினி உதவியுடன் நடக்கஉள்ள முதல் தேர்வு என்பதால், அதில் மட்டும்,வினாத்தாள் முறையிலும் தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply