பிரியாணி, ப்ரைடு ரைஸ்: களை கட்டும் காவேரி மருத்துவமனை
திமுக தலைவர் கருணாநிதி கடந்த நான்கு நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கைகளும், அவரை பார்த்துவந்த தலைவர்களும் கூறுகின்றனர்.
ஆனால் தலைவர் கருணாந்தி காணாமல், அவருடைய கையசைவை பார்க்காமல் செல்ல மாட்டோம் என காவேரி மருத்துவமனை எதிரே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இரவுபகலாக காத்திருக்கின்றனர். அதைபோல் கருணாநிதி குறித்த செய்தியை சேகரிக்க இரவு முழுவதும் தூங்காமல் செய்தியாளர்களும் தங்கள் கேமிராமேனுடன் உள்ளனர்.
இந்த நிலையில் பத்திரிகையாளர்களக்கு பிரியாணி, கழகத் தோழர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு மதிய உணவு, 5000 குடிநீர் பாட்டில்கள் சற்று முன் வழங்கப்பட்டது. மேலும் இன்று இரவு ப்ரைடு ரைஸ் வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக திமுக பிரமுகரும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.வுமான ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.