ஆப்பிள் ஐபோனுக்கு பதில் இந்த பொருளா? ஏமாந்த வங்கி அதிகாரி அதிர்ச்சி
வங்கி மேலாளரிடம் ஐபோனுக்கு பதிலாக துணி சலவை செய்யும் சோப்பை விற்பனை செய்து நூதன மோசடி அரங்கேறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஐஓபி வங்கியில் மேலாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ். அலுவலகத்தில் அவரை சந்தித்த அடையாளம் தெரியாத இருவர் புதிய மாடல் ஆப்பிள் ஐ- போன் ஒன்று விற்பனைக்கு உள்ளதாக அணுகியுள்ளனர்.
முதலில் அதை வாங்க மறுத்த மேலாளர் ரமேஷ், ஐ- போனின் விலை ரூ. 15,000- தான் என்று கூறியவுடன் வாங்க ஒப்புக்கொண்டார். பேக் செய்த நிலையில் அந்த ஐ- போனை பெட்டியுடன் ரமேஷ் வாங்கியுள்ளார்.
அடையாளம் தெரியாத இருவரும் அங்கியிருந்து சென்றவுடன், மேலாளர் ரமேஷ் பெட்டியை பிரித்துப் பார்த்துள்ளார். அதில் ஐ போன்-க்கு பதிலாக துணி துவைக்கும் சோப் இருந்துள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ், தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தார். சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதை தொடர்ந்து காவல்துறையினர் புகாரை பதிவு செய்து, வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
வங்கி மேலாளரிடம் ஐ- போனுக்கு மதிலாக துணி துவைக்கும் சோப் விற்பனை செய்யப்பட்டுள்ள இந்த நூதன மோசடி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
bank manager receives toilet soap instead of apple i phone
வங்கி மேலாளர் | ஐ போன் | toilet soap | iphone soap | chennai mylapore | Bank manager | Apple I Phone