பிரியாணி தகராறு: 2 பேர்களை கட்சியில் இருந்து நீக்கிய செய்த திமுக

பிரியாணி தகராறு: 2 பேர்களை கட்சியில் இருந்து நீக்கிய செய்த திமுக

சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வரும் ஒருவரின் கடையில் திமுகவினர் புகுந்து பிரியாணி இல்லை என்று கூறியதால் கடை ஊழியர்களை சர்மாரியாக தாக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பிரியாணி கடை ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய யுவராஜ், திவாகரன் ஆகியோர் மீது தி.மு.க. தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் வடக்கு பகுதியை சேர்ந்த யுவராஜ், திவாகரன் ஆகியோர் தி.மு.க.வின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஒழுங்கு நடவடிக்கை அறிக்கையுடன் தி.மு.க. தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அறிவிப்பை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

விருகம்பாக்கத்தில் உள்ள கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தி.மு.க. கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டு உள்ளார்கள். தி.மு.க. நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.

Leave a Reply