ஜெயலலிதாவுக்கு முதன்முதலில் பதவியேற்று வைத்த தமிழக முன்னாள் கவர்னர் மரணம்

ஜெயலலிதாவுக்கு முதன்முதலில் பதவியேற்று வைத்த தமிழக முன்னாள் கவர்னர் மரணம்

தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சருமான பீஷ்ம நாராயண் சிங் காலமானார். அவருக்கு வயது 85

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய பீஷ்ம நாராயண் சிங் 1933ம் ஆண்டில் ஜூலை 13ம் தேதி ஜார்கன்ட் மாநிலத்தில் பிறந்தார்.

காந்திய கொள்கைகளின் மீது மிகவும் பற்று கொண்டவராக வளர்ந்த இவர், 1967ம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து பீகார் மாநிலத்திற்கு கல்வித்துறை, உணவு வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் இருந்துள்ளார்.

1980ம் ஆண்டில் இந்திரா காந்தி அமைச்சரவையில் பாராளுமன்ற விவகாரங்கள் துறை, குடியிருப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறைக்கான மத்திய அமைச்சராகவும் பீஷ்ம நாராயண் சிங் பதவி வகித்துள்ளார்.

கடந்த 1984 முதல் 1989 வரை, அசாம் மாநிலத்திற்கு ஆளுநராக பதவி வகித்த இவர், 1991ம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தமிழகத்திற்கு பீஷ்ம நாராயண் சிங் ஆளுநராக இருந்தார்.

அந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் நிலவி வந்த பதற்றமான அரசியல் சூழ்நிலை காரணமாக, மாநிலத்தில் ஜானதிபதி ஆட்சியை அமல்படுத்தியவர் பீஷ்ம நாராயண் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயணன் சிங் மறைவிற்கு தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

former tamil nadu governor bhishma narain singh passes away at age of 85

முன்னாள் தமிழக ஆளுநர் | பீஷ்ம நாராயண் சிங் | Governor of Assam | Former Tamil Nadu governor | Bhishma Narain Singh

Leave a Reply