தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ரூ.50 ஆயிரம் அபராதம்: ஏன் தெரியுமா?

தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ரூ.50 ஆயிரம் அபராதம்: ஏன் தெரியுமா?

மதிய உணவு திட்டத்தின் பயனாளிகள் குறித்த தகவல்களை தராத தமிழ்நாடு உள்பட 3 மாநிலங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த அபராதம் ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கும் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மதிய உணவு திட்டத்தால் பலன் அடையும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை ஒவ்வொரு மாநிலமும் தங்களது இணையதளத்தில் 3 மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் தமிழகம் உள்பட மூன்று மாநிலங்கள் இந்த தகவல்களை வெளியிடவில்லை

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் உத்தரவுப்படி மதிய உணவு திட்ட பயனாளிகளின் தகவல்களை வெளியிடாத தமிழ்நாடு, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தொகையை 4 வாரங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டு சட்ட பணிகள் ஆணையகத்திடம் செலுத்த வேண்டும் என்றும் கூறினர். மேலும் இந்த வழக்கு செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

Leave a Reply