30 மணி போராட்டத்திற்கு பின் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு

30 மணி போராட்டத்திற்கு பின் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு

பீகார் மாநிலம் முங்கேர் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை, 30 மணி நேர போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது.

பீகார் மாநிலம் முங்கேர் பகுதியை சேர்ந்த சன்னோ என்ற குழந்தை, முர்கியா சாக் பகுதியில் உள்ள தாத்தா வீட்டுக்கு கடந்த செவ்வாயன்று சென்றாள். விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு திறந்திருந்த 110 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். சுமார் 45 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருந்தது தெரியவந்ததால், மருத்துவர்கள் குழாய் வழியாக ஆக்சிஜனை செலுத்தி சுவாசிக்க உதவினர்.

இதைத் தொடர்ந்து மீட்பு படை வீரர்கள் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டப்பட்டு மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 30 மணி நேர போராட்டத்துக்கு பின் குழந்தை சன்னோ நேற்று பத்திரமாக மீட்கப்பட்டாள்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சன்னோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply