இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள டிரம்புக்கு அழைப்பு

இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள டிரம்புக்கு அழைப்பு

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனவரி 26ம் தேதி இந்தியாவின் குடியரசு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஓபாமா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிலையில் அவரை தொடர்ந்து, 2019ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் பங்கேற்க கேட்டு இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதை பிரதமர் அலுவலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அடுத்தாண்டு இந்தியாவிற்கு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையில் உள்ள நல்லுறவை மேம்படுத்திக் கொள்ளும் விதத்தில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அழைப்பு குறித்து அதிபர் டிரம்ப் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்பது தொடர்பாக அதிபர் டிரம்ப் ட்விட்டரில் தகவல் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply