பவன்கல்யாணை கீழ்த்தரமாக திட்டினாரா ஸ்ரீரெட்டி?
சமூக வலைதளம் மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளில் பலமுறை கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி நடிகை ஸ்ரீரெட்டி பேசி வருவதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பிரபல தெலுங்கு சினிமா நடிகரும், ஆந்திராவின் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணை மிகவும் கீழ்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி ஸ்ரீரெட்டி திட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழ் திரையுலகில் நிலவும் பாலியல் ரீதியான தொல்லைகளை பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிட தொடங்கியவர், ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது பல்வேறு அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார்.
பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டுகளை எழுப்புவது மூலம் திரைப்பட வாய்ப்புகளை பெற நினைக்கிறார் என ஸ்ரீரெட்டிக்கு பதில் தெரிவித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ். இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது மனைவியை தாக்கி பேசி வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நெட்டிசன்கள் வறுத்தெடுக்க, உடனே ஸ்ரீரெட்டி அந்த வீடியோ பதிவை நிக்கினார். தற்போது மீண்டும் யாரையோ குறிப்பிட்டு கெட்ட வார்த்தைகளை வைத்து ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார்.
இதில் ராகவால் லாரன்ஸை தான் அவர் தாக்கி பேசுவதாக பல்வேறு தரப்பினர் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். எனினும் சிலர் அது பவன் கல்யாண் என்பது போல கமெண்டுகளை தீட்டியுள்ளனர்.
ஸ்ரீரெட்டியின் ஃபேஸ்புக் பதிவுகளில் எது உண்மை, எது பொய் என்பது தெரியவில்லை. ஆனால் அவரது பதிவு, பல நெட்டிசன்களுக்கு நல்ல பொழுப்போக்கை அளித்து வருகின்றன.