வெள்ளைக்காரர்களின் நிலங்களை பறிக்க உத்தரவு: தென்னாப்பிரிக்கா அரசு அதிரடி

தென்ஆப்பிரிக்கா நாட்டில் சுதந்திரத்துக்கு பின்னர் நிரந்தரமாக தங்கி இருக்கும் வெள்ளைக்காரர்களிடம் உள்ள நிலங்களை பறிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தென்ஆப்பிரிக்கா நாடு கடந்த 1994ஆம் ஆண்டு வெள்ளைக்காரர்களிடம் இருந்து முழு சுதந்திரம் பெற்றது. சுதந்திரத்திற்கு பின்னரும் அங்கு பல வெள்ளைக்காரர்கள் குடியிருந்தனர். தென்ஆப்பிரிக்காவின் மொத்த மக்கள் தொகை 5 கோடிய 15 லட்சம். அதில் 8 சதவீதம் பேர் வெள்ளைக்காரர்களாக உள்ளனர். தென்ஆப்பிரிக்காவின் பெரும்பாலான சொத்துக்கள் அவர்களிடம் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக வளம்கொழிக்கும் நிலங்கள் அனைத்தும் அவர்களிடம் தான் உள்ளது.

எனவே வெள்ளைக்காரர்களிடம் இருந்து நிலத்தை பறித்து கருப்பர்களுக்கு வழங்குவதற்கு ஏற்கனவே அரசு முயற்சிகள் மேற்கொண்டது. இதற்காக இப்போது புதிய சட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக அதிபர் ராமபோசா தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தின்படி எந்த இழப்பீடும் கொடுக்கப்படாமல் வெள்ளைக்காரர்களிடம் இருந்து சொத்துக்கள் பறிக்கப்படும். அவை நிலம் இல்லாத கருப்பர்களுக்கு அவர்களுடைய தகுதிகளின் அடிப்படையில் பிரித்து வழங்கப்படும்.

ஆப்பிரிக்க அரசின் இந்த முயற்சியால் வெள்ளைக்காரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

அண்டை நாடான ஜிம்பாப்வே நாட்டில் இதேபோல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வெள்ளைக்காரர்களின் பெரும்பாலான சொத்துக்கள் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply