மத்திய அரசின் ஊழலை அம்பலப்படுத்த ராகுல்காந்தியின் புதிய வியூகம்:
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க புதிய வியூகம் வகுப்பது குறித்து முடிவு எடுக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் தலைநகர் டெல்லியில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று கூடியது.
இந்த கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். உடல் நலக்குறைவு காரணமாக, இந்த கூட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்திற்குப்பின் ராகுல்காந்தி பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க, பாஜக அரசு தவறி விட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளார். பெருகி வரும் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்த தீவிர பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
The CWC met today. As a team, we discussed the political situation in the country & the huge opportunity for the Congress to highlight issues of corruption and failure of the government to provide jobs to our youth. Thank you to all those who attended today’s meeting. pic.twitter.com/QTPM8ltO51
— Rahul Gandhi (@RahulGandhi) August 4, 2018