டூரிஸ்ட் விசாவில் வந்த வங்கதேச இளைஞருக்கு ஆதார் கார்டு
வங்கதேசத்தில் இருந்து டூரிஸ்ட் விசாவில் வந்த இளைஞர் ஒருவருக்கு இந்தியாவின் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு கிடைத்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி முகம்மது கபீர் என்ற 18 வயது இளைஞர் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு மேற்குவங்காள மாநிலத்திற்கு டூரிஸ்ட் விசாவில் வந்தார். அதன் பின்னர் அவர் டெல்லி சென்று ஒருசில வேலைகளை பார்த்து இந்தியராகவே மாறிவிட்டார். அவருக்கு பான்கார்டு மற்றும் ஆதார் கார்டும் வழங்கப்பட்டு தற்போது அவர் இந்திய குடிமகனாகவே கிட்டத்தட்ட மாறிவிட்டார்.
இவர் போன்ற பலர் வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்து, இங்குள்ள அடையாள அட்டைகளை பெற்றுள்ளதால் தான் சமீபத்தில் மத்திய அரசு அசாமில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பட்டியலை வெளியிட்டது. இதில் 40 லட்சம் பேர் இந்தியாவில் வங்கதேசத்தினர் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில் ஒருசில இந்திய அரசியல்வாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.