தகுதியில்லாத அரசாணை: சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு சென்னை ஐகோர்ட் கண்டனம்

தகுதியில்லாத அரசாணை: சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு சென்னை ஐகோர்ட் கண்டனம்

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில், பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு பிரிவு அமைத்து ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்த நிலையில், அதனை மீறும் வகையில் தமிழக அரசின் அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தனர்.

அரசாணைக்கு காட்டிய வேகத்தை மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் காட்டாதது ஏன் எனக் கேட்ட நீதிபதிகள், இது ஒரு நிமிடம் கூட அமலில் இருப்பதற்கு தகுதியில்லாத அரசாணை என கூறினர். பொன்.மாணிக்கவேல் விசாரணையில் நம்பிக்கை இல்லை என தமிழக அரசு கூறிய நிலையில், அரசாணை குறித்து விளக்கமளிக்க தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Leave a Reply