வைரமுத்துவின் பகுத்தறிவு எங்கே போயி’ற்று? காய்ச்சி எடுக்கும் நெட்டிசன்கள்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியும், அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான வைரமுத்துவும் பகுத்தறிவு கொள்கையை கடைபிடித்தவர்கள். குறிப்பாக இந்து சமயத்தின் சம்பிராதயங்களை கடைபிடிக்காமல் இருந்தவர்கள்
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு கவிஞர் வைரமுத்து நேற்று பாலூற்றியது நெட்டிசன்கள் மத்தியில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து கேள்வி பதிலளித்த வைரமுத்து, தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய காரியத்தை செய்தேன் என தெரிவித்தார்.
இதுகுறித்த நெட்டிசன்கள் பதிவுகள் இதோ:
கலைஞரை விதைத்த இடத்தில் கவிஞர் வைரமுத்து பால் ஊற்றியதாக ஒரு செய்தி படித்தேன்.
பெரியார் வாழ்க்கையிலிருந்து ஒரு செய்தி: யாழ்ப்பாணத்திலிருந்து சைவப் புலவர் கதிரவேலு பெரியாரைச் சந்திக்க ஈரோடு இல்லம் சென்றிருக்கிறார். பயணக் களைப்போடு வந்த புலவரை பெரியார் அருந்தப் பால் கொடுத்து வரவேற்றுள்ளார். பின் இருவருக்குமிடையே இலக்கியத் தர்க்கம் தொடங்கிற்று.
புராணங்களின் அருமைகளைப் புலவர் கூற, பெரியாரோ கம்பராமாயணத்தை எரிக்கவேண்டும் மகாபாரதத்தைக் கொளுத்தவேண்டும் என்றவாறு பேசியிருக்கிறார்.
கடுப்பான யாழ்ப்பாணப் புலவர் எழுந்து நின்று ”உம்மிடமா யாம் அருந்தினோம் பாலை” எனக் கூக்குரலிட்டுவிட்டு, பெரியாருக்கு முன்னாலேயே தனது தொண்டைக்குள் விரலைவிட்டுக் குடித்த பாலை வாந்தியெடுத்துவிட்டுப் போய்விட்டார்.
கலைஞர் இருந்திருந்தால் வைரமுத்து குடித்த பாலை கக்க வைத்திருப்பார்.
‘ஆயுள் வளர்க்கும் ஆட்டுப்பால்
அன்பை வளர்க்கும் மாட்டுப்பால்’
என எழுதினீர்களே
#வைரமுத்து
கொஞ்சமாவது..
‘அறிவுப்பால் அருந்தியிருக்கக் கூடாதா’?