திமுக செயற்குழுக அவசர கூட்டம்: ஸ்டாலினுக்கு தலைவர் பதவியா?
வரும் 14ஆம் தேதி திமுக செயற்குழுவின் அவசர கூட்டம், நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால், கடந்த 7ஆம் தேதி காவிரி மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து புதிய தலைவர் யார் என்ற கேள்வி கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. இதற்காக விரைவில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 10 மணியளவில் கூட்டம் நடைபெற உள்ளது.
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார். வயது முதிர்வின் காரணமாக, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் பதவி விலக நேரிடும் என்று கூறப்படுகிறது.