காவிரி ஆற்றில் வெள்ளம்: 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதேபோல் ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வருவதால் அங்கிருந்து வரும் உபரி நீர் காவிரியில் கரைபுரண்டு ஓடுகிறது
இந்த நிலையில் காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், வருவாய் துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்தார்.
எனவே காவிரி கரையோரம் உள்ள 12 மாவட்ட மக்களும், காவிரி கரையோரங்களில் வாழும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.