அழகிரி தொடர்பில் யாரும் இல்லை: ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ
கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் திமுகவில் ஸ்டாலின் அணி, அழகிரி அணி என பிரிவு உண்டாகும் என அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றனர். அதற்கு ஏற்றாற்போல் அழகிரி இன்று காலை அளித்த பேட்டியில் இன்னும் இரண்டு நாட்களில் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவிக்கவுள்ளதாகவும், திமுகவின் உண்மையான விசுவாசிகள் தன்பக்கம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் திமுகவில் யாரும் அழகிரியுடன் தொடர்பில் இல்லை என்றும், அனைவரும் கட்டுக்கோப்பாக இருப்பதாகவும், திமுக தலைவர் கருணாநிதி மறைவில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை என்றும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும், ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உள்ளானவருமான ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மேலும் அழகிரி திமுகவில் இல்லாததால் அவரது கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை என்றும், அவர் கட்சியில் இல்லாதது திமுக தலைவர் கருணாநிதி எடுத்த முடிவாகும், இப்போது இருப்பவர்கள் எடுத்ததல்ல என்றும் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.