கனமழை, பெருவெள்ளம் எதிரொலி: ஓணம் பண்டிகை ரத்து என முதல்வர் அறிவிப்பு
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். மேலும் சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பலத்த மழையால் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக, இந்த ஆண்டு கேரள மாநிலத்தில் ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிக்கைக்காக வருடந்தோறும் அரசு செலவு செய்யும் தொகை வெள்ள நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்