பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் ரத்து: பாஜகவின் திடீர் முடிவு ஏன் தெரியுமா?
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை விடுத்த நிலையில் சற்றுமுன் வெளியான அறிக்கையிலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் காக்கும் உபகரணங்கள் உதவியுடன் சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யபப்ட்டுள்ளதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. இதனால் ஆகஸ்ட் 18,19ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.