வாஜ்பாய்க்கு நேரில் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்

வாஜ்பாய்க்கு நேரில் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமரும், கார்கில் போரின் நாயகனும், பொக்ரான் அணுகுண்டு மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்தவருமான அடல் பிகாரி வாஜ்பாய் நேற்று தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

மறைந்த மாபெரும் தலைவர் வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மேலும், பல மாநில முதல்வர்களும், மத்திய மந்திரிகளும் அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இருவரும் வாஜ்பாய் உடலுக்கு இன்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாய் குறித்த செய்தியாளர்களிடம் கூறிய மு.க.ஸ்டாலின் ’கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தவர் வாஜ்பாய் அவரது மறைவு வருத்தமளிக்கிறது. தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என்ற நிலை வந்த போது அரசியல் சாசனத்தை காத்தவர் வாஜ்பாய். அவரது மறைவினால் நாட்டு மக்கள் அடைந்துள்ள துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன்’ என தெரிவித்தார்.

Leave a Reply