திருச்சி கொள்ளிடம் ஆற்றின் பாலம் இடிந்ததால் பரபரப்பு

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் பாலம் இடிந்ததால் பரபரப்பு

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழையின் காரணத்தால் தென்னிந்தியா முழுவதுமே பலத்த மழை பெய்து வரும் நிலையில் காவிரியில் இருந்து திறந்துவிடப்படும் அதிகப்படியான தண்ணீரில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த நிலையில் திருச்சி கொள்ளிடம் ஆற்று பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததால் அந்த பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. முதலில் 18-வது இணைப்பு பாலத்தில் விரிசலும், அதன்பின்னர் 20-வது இணைப்பு பாலத்தில் விரிசலும் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் நேற்றிரவு திருச்சி கொள்ளிடம் பழைய ஆற்றுப்பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் முற்றிலும் இடிந்து ஆற்றில் மூழ்கியது. இந்த பாலம் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படாத பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply