கோஹ்லி-ரஹானே பொறுப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்ட இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்மூன்று விக்கெட்டுக்களை சொற்ப ரன்களுக்கு இழந்து இந்திய அணி தவித்து வந்த நிலையில் கேப்டன் விராத் கோஹ்லியும், துணை கேப்டன் ரஹானேவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
விராத் கோஹ்லி, 152 பந்துகளில் 97 ரன்களும், ரஹானே 131 பந்துகளில் 81 ரன்களும் எடுத்ததால் இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 87 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 307 ரன்கள் குவித்துள்ளது.
முதல் நாள் முடிவில் நல்ல ஸ்கோரை இந்தியா எட்டியுள்ளதால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது