சரண் அடைந்தால் ஜெயிலில் சலுகை: விஜய்மல்லையாவுக்கு சிபிஐ தகவல்
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9500 கோடி கடன் பெற்று அந்த கடனை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்று விட்ட நிலையில் அவரை இந்தியாவுக்கு அழைத்து வர சி.பி.ஐ. முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் விஜய்மல்லையா சரண் அடைந்தால் அவருக்கு ஜெயிலில் சிறப்பு சலுகை வழங்கப்படும் என சிபிஐ லண்டன் நீதிமன்றத்தில் வீடியோ ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
10 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியில் அவர் அடைக்கப்படும் அறையில் உள்ள அதி நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன.
அங்கு டி.வி.செட், தனியாக கழிவறை வசதி, இயற்கையான சூரிய ஒளி அவர் அறைக்குள் வருவது போன்ற அமைப்பு உள்ளது. அவர் நூல் நிலையம் சென்று படிப்பதற்கான வசதிகள் நடை பயிற்சிக்கான இட வசதி குறித்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் இன்னும் 2 மாதத்தில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்ப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.