திமுகவில் என்னை சேர்க்காவிட்டால்? அழகிரி எச்சரிக்கை

திமுகவில் என்னை சேர்க்காவிட்டால்? அழகிரி எச்சரிக்கை

திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் இன்று திமுக தலைவராக பதவியேற்கும் நிலையில் : திமுகவில் என்னை சேர்க்காவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியும் மகனுமான அழகிரி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுக தலைவராக ஸ்டாலின் இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்களால் அறிவிக்கப்படவுள்ளார். அதன்பின்னர் திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில் ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளார். இன்று அளித்த பேட்டியில்; கருணாநிதி உயிரோடு இருந்த போதும் என்னை கட்சியில் சேர்க்க எதிர்ப்பு இருந்து வந்தது. கருணாநிதி இல்லாத நிலையில் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஸ்டாலின் செயல் தலைவராக பொறுப்பேற்ற போது கருணாநிதி இருந்ததால் நான் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. என்னை கட்சியில் சேர்க்க வேண்டும். இல்லையேல் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அழகிரி கூறினார்.

திமுக தலைவராக பொறுப்பேற்றவுடன் அழகிரிக்கு மு.க.ஸ்டாலின் தக்க பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply