திமுகவில் நீக்கப்பட்ட முக்கிய பதவி

திமுகவில் நீக்கப்பட்ட முக்கிய பதவி

திமுக செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் இன்று காலை திமுகவின் தலைவராக பொறுப்பேற்று கொண்டதை அடுத்து அவர் இதுவரை வகித்து வந்த செயல் தலைவர் பதவி நீக்கப்பட்டுள்ளது.

திமுக செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி 4-வது பிரிவு நீக்கப்பட்டதாக இன்று நடந்த திமுகவின் பொதுக்குழுவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

மேலும், மாவட்ட எல்லைகளில் மாற்றம் செய்ய கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட தலைமை அலுவலகங்கள் மாவட்ட தலைநகரில் இருக்கவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply