ரூ.10,720 கோடி பழைய நோட்டுக்கள் எங்கே? ரிசர்வ் வங்கி அதிர்ச்சி
மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும் ,அவற்றை வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ள வேண்டும் என்றும் 2016 டிசம்பருக்கு மேல் அந்த பணத்தை வைத்துள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தது.
ஆனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் ரூ.10,720 கோடி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வரவில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
இதுவரை ரூ.15.3 லட்சம் கோடி பழைய நோட்டுகள் மட்டுமே வந்துள்ளதாகவும் இன்னும் ரூ.10,720 கோடி பழைய நோட்டுக்கள் எங்கே? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் – 2017-18ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.