பாஜகவை வீழ்த்த வேண்டிய அவசியம் இல்லை: திருநாவுக்கரசர்
தமிழகத்தில் ஏற்கனவே பாஜக அதளபாதாளத்தில் வீழ்ந்துதான் இருக்கின்றது. அதை மீண்டும் வீழ்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாஜக பிரமுகருமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பாஜக வேட்பாளர் பெற்றார். அதேபோல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டாலும் கிட்டத்தட்ட அதே வாக்குகளைத்தான் பெறும்
இந்த நிலையில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று ஒருசில கட்சியினர் கூறி வருவது குறித்து கருத்து தெரிவித்த திருநாவுக்கரசர், “தமிழகத்தில் பாஜக வீழ்ந்துதான் உள்ளது; அதை வீழ்த்த வேண்டிய அவசியமில்லை” என்று கூறியுள்ளார்.