கட்சியில் சேர்த்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்: அழகிரி
கட்சியில் எங்களை சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்று கொள்வது மட்டுமின்றி அனைத்து திமுகவினர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என்று சற்றுமுன் மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் கூறினார்.
நேற்று வரை தன்னை கட்சியில் சேர்க்காவிட்டால் திமுக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கூறி வந்த அழகிரி இன்று திடீரென பல்டி அடித்திருப்பது திமுகவினர்களை மட்டுமின்றி அனைவரையும் ஆச்சரிப்படுத்தியுள்ளது.
ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை மீட்னும் கட்சியில் சேர்த்து கொண்ட ஸ்டாலின், அழகிரியை கட்சியில் இணைப்பது சந்தேகமே என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.