கமல்ஹாசன் எந்த தேர்தலிலும் நிற்க போவதில்லை: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்
திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் தனது கட்சி போட்டியிட போவதில்லை என சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தது குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், ‘கமல்ஹாசன் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலுடன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுவோம் என்று சொன்னால் அது விஷயம். போட்டியிடவில்லை என்று சொன்னால் விஷயமே இல்லை. தேர்தல் என்றால் கமல்ஹாசனுக்கு பயம். எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அ.தி.மு.க. பணியை தொடங்கும். மக்களுடன் தொடர்பில்லாதவர்கள் தான் வேலைகளை இப்போதே தொடங்கிவிடுவார்கள் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.