திருமுருகன் காந்திக்கு ஒரே ஒரு வழக்கில் மட்டும் ஜாமீன்

திருமுருகன் காந்திக்கு ஒரே ஒரு வழக்கில் மட்டும் ஜாமீன்

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

சென்னையில் தடையை மீறி ஊர்வலம் சென்றதாக கைது செய்யப்பட்ட வழக்கில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி, பெங்களூருவில் கைது செய்யப்பட்ட அவர், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சுபாதேவி, திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இருப்பினும், மேலும் சில வழக்குகள் திருமுருகன் காந்தி மீது உள்ளதால், சிறையில் இருந்து அவர் விடுதலையாக முடியாது என தெரிகிறது.

Leave a Reply