புஜாரே அபார சதத்தால் இந்திய அணி முன்னணி

புஜாரே அபார சதத்தால் இந்திய அணி முன்னணி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி கடந்த 30ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடத்தொடங்கிய இந்திய அணி, தொடக்க ஆட்டக்காரர்கள் சுமாராக விளையாடினாலும் புஜாரா அற்புதமாக விளையாடி சதமடித்தார். முதல் இன்னிங்சில் புஜாரேவின் அபார சதத்தால் இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்று இந்திய அணி 273 ரன்கள் எடுத்தது. புஜாரா 132 ரன்களும், கேப்டன் விராத் கோஹ்லி 46 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவின்போது விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.

Leave a Reply