மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் ரகசிய ஒப்பந்தம்:திடீரென ரத்து செய்த கூகுள்
அமெரிக்காவில் தனிநபர் நிதி சார்ந்த தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தத்தை கூகுள் நிறுவனம் ரத்து செய்தது.
கூகுள் விளம்பரங்களால் ஆன்லைனில் மட்டும் அல்லாமல், நேரடியாக நடைபெறும் சில்லரை விற்பனை குறித்து அறிவதற்காக அமெரிக்காவில் மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டது. விசா போன்ற இதர சேவை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அம்பலமாகவே வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதை அடுத்து ரகசிய ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் முறித்துக் கொண்டன. தனிநபரின் நிதி சார்ந்த தகவல்கள் எதுவும் பகிரப்படவில்லை என இரு நிறுவனங்களும் கூறியுள்ளன.