முன்னாள் அதிபர் தேர்தலில் போட்டியிட தடை: பிரேசிலில் அதிரடி

முன்னாள் அதிபர் தேர்தலில் போட்டியிட தடை: பிரேசிலில் அதிரடி

பிரேசில் நாட்டில் அடுத்த வரும் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் லுலா அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. லூலா தற்போது லஞ்ச வழக்கில் சிக்கி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் முன்னாள் அதிபர் லூலா வரும் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து இதுகுறித்து வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர், தேர்தலில் நிற்க முடியாது என அதிரடியாக தடை விதித்தது. ஆனால் இந்த தடை உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக லுலாவின் வக்கீல்கள் குழு அறிவித்துள்ளது.

இதே போன்று லுலாவின் தொழிலாளர் கட்சி கருத்து தெரிவிக்கையில், “லுலா அதிபர் தேர்தலில் நிற்பதற்காக எல்லா விதத்திலும் போராடுவோம்” என கூறியது. மேலும் லுலாவுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கி போராடப்போவதாகவும் கூறி உள்ளது.

Leave a Reply