சென்னையில் பெட்ரோல் விலை ரூ.82: வரலாறு காணாத விலையேற்றத்தால் மக்கள் அதிர்ச்சி

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.82: வரலாறு காணாத விலையேற்றத்தால் மக்கள் அதிர்ச்சி

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். குறிப்பாக நடுத்தர மக்கள் தங்கள் சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை பெட்ரோலுக்கு செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று ரூ.82.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.81.92க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.74.77க்கும் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரே நாளில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்றைய விலையை விட 32 பைசாக்கள் உயர்ந்தும், டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 42 பைசாக்கள் உயர்ந்தும் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால், இந்த விலை உயர்வு அவற்றுடன் நின்று விடுவது இல்லை. சங்கிலித்தொடர்போல இவற்றின் விலை உயர்வு பல்வேறு வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply