மெரீனாவில் போராட்டத்திற்கு அனுமதி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

மெரீனாவில் போராட்டத்திற்கு அனுமதி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

சென்னை மெரீனாவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாறு காணாத ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் தமிழக அரசின் தடையால் வேறு போராட்டங்கள் நடைபெறவில்லை. இந்த நிலையில் மெரீனாவில் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்ற தமிழக அரசின் முடிவு சரியே என்று சென்னை ஐகோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்குமாறு தேசிய நதிகள் இணைப்புக்கான தென்னிந்தியத் தலைவர் அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்து இருந்தார். அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து, தனி நீதிபதி கடந்த ஏப்ரல் மாதத்தில், மெரினாவில் அய்யாக்கண்ணு ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி அளித்து இருந்தார். ஆனால் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் அமர்வு, மெரினாவில் எவ்வித போராட்டத்தையும் அனுமதி முடியாது எனவும், மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தமிழக அரசு எடுத்து முடிவு சரியானதுதான் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், மெரினாவில் போராட்டம் நடத்த தனி நீதிபதி அளித்த அனுமதியை நிரந்தரமாக ரத்து செய்தனர்.

Leave a Reply