ஸ்டாலினை சந்திக்கும் எண்ணம் இல்லை: மு.க.அழகிரி

ஸ்டாலினை சந்திக்கும் எண்ணம் இல்லை: மு.க.அழகிரி

திமுக தலைவராகியிருக்கும் மு.க.ஸ்டாலின் கட்சியில் இருந்து வெளியேறிய, நீக்கப்பட்ட ஒருசிலரை மீண்டும் கட்சியில் சேர்க்க அனுமதி அளித்த போதிலும், ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொள்ள தயார் என்று மு.க.அழகிரி கூறிய பின்னரும் அவரை கட்சியில் சேர்க்க இன்னும் அனுமதி தரவில்லை.

இந்த நிலையில் நாளை மறுநாள் சென்னையில் அமைதிப்பேரணியை நடத்தவுள்ள மு.க.அழகிரி, இந்த பேரணிக்கு பின்னராவது தனக்கு திமுகவில் இருந்து அழைப்பு வரும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை விமானநிலையத்தில் பேசிய மு.க.அழகிரி, ‘நாளை மறுதினம் நடைபெறும் அமைதிப் பேரணியில் லட்சம் பேருக்கு மேல் கலந்து கொள்வார்கள் என்றும், திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply