இது ஜனநாயக நாடு என்று நினைவுபடுத்த வேண்டியதாயிருக்கிறது: கமல்ஹாசன்

இது ஜனநாயக நாடு என்று நினைவுபடுத்த வேண்டியதாயிருக்கிறது: கமல்ஹாசன்

நேற்று திருவண்ணாமலையில் மக்களின் கருத்தை கேட்க வந்த அகில இந்திய விவசாயிகள் சங்கத்தலைவர் யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டார். இந்த கைது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:

`வெளிமாநிலத்திலிருந்து ஒரு அரசியல்வாதி யோகேந்திர யாதவ், நம் விவசாயிகளிடம் கருத்துக் கேட்க தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது விமர்சனத்துக்குரியது. கடும் கண்டனத்துக்குரியது. கருத்து கேட்டதைக் கூட தடுக்கும் அதிகாரம் எப்படி இவர்களுக்கு வந்தது. சட்டத்தை ஒரு காரணமாக சொல்லி குரல்களே எழாமல் செய்யும் இந்த செயல் சர்வாதிகாரம் என்று எனக்கு தோன்றுகிறது. இல்லை இது ஜனநாயக நாடு என்று நினைவுபடுத்த வேண்டியதாயிருக்கிறது. இன்னொன்றும் நினைவுபடுத்துகிறேன். ஜனநாயகத்தின் வழியாகத் தான் சர்வாதிகாரிகள் உலகெங்கிலும் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறார்கள் பலமுறை. அதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மக்கள் கருத்துக்களை தெளிவாக பயமின்றி எடுத்துச்சொல்லும் சூழல் வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால், வரவழைக்க வேண்டும். யோகேந்திரயாதாவின் கைது கண்டனத்துக்குரியது”

இவ்வாறு கமல்ஹாசன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply